< Back
சினிமா செய்திகள்
மூலிகை பெயரில் போதை பொருள்... நள்ளிரவில் பிக்பாஸ் பிரபலம் உள்பட 14 பேர் கைது
சினிமா செய்திகள்

மூலிகை பெயரில் போதை பொருள்... நள்ளிரவில் பிக்பாஸ் பிரபலம் உள்பட 14 பேர் கைது

தினத்தந்தி
|
27 March 2024 10:12 AM IST

ஹூக்கா பார்லரில் இருந்தவர்களில் பிக்பாஸ் சீசன் 17-ல் வெற்றி பெற்ற முனாவர் பரூக்கியும் ஒருவர் ஆவார்.

புனே,

மராட்டியத்தின் தெற்கு மும்பை நகரில் கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லர் ஒன்று உள்ளது. இதில், மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது என போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து அந்த பார்லருக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பார்லரில் இருந்த 14 பேர் போலீசாரின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பிக்பாஸ் சீசன் 17-ல் வெற்றி பெற்ற போட்டியாளரான முனாவர் பரூக்கியும் ஒருவர் ஆவார். இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனினும், ஜாமீனில் வெளிவர கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றை கொடுத்து விட்டு பரூக்கி விடுவிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்