< Back
சினிமா செய்திகள்
விஜய் நடித்துள்ள லியோ படத்தில் 13 சென்சார் கட் - ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமா செய்திகள்

விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தில் 13 சென்சார் கட் - ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
10 Oct 2023 1:04 AM IST

விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தில் 13 சென்சார் கட் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'லியோ' திரைப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. டிரைலரில் நடிகர் விஜய் பேசிய ஆபாச வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த டிரைலர் தமிழ்நாட்டில் உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

சென்சார் செய்யப்படாத டிரைலரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் 'லியோ' படத்தில் 13 சென்சார் கட் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

புகை மற்றும் போதைப்பொருட்கள் குறித்த காட்சிகள், தகாத கெட்ட வார்த்தைகள் இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்றும் திரைப்படத்தில் ரத்தம் இருக்கக்கூடிய சண்டைக் காட்சிகள், படத்தில் இடம்பெற்ற பாடலில் வரும் சிகரெட் கம்பெனிகள் பெயர் என்று 13 கட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்