மகனின் பெயரை பச்சை குத்திய '12-த் பெயில்' பட நடிகர்
|'12-த் பெயில்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் விக்ராந்த் மாஸ்ஸி.
மும்பை,
விது சோப்ரா இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் '12-த் பெயில்'. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மனோஜ்குமார் ஷர்மா ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் அவரது மனைவி ஸ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ்.ன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.
இந்த படம் கடந்த டிசம்பர் 29ம் தேதி ஓடிடியில் வெளியானது. அதன்பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருதையும் வென்றது.
இந்த படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி ஷீத்தல் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வர்தான் என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தனது கையில் மகனின் பெயரை பச்சை குத்தி இருக்கிறார். இது குறித்தான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.