< Back
சினிமா செய்திகள்
ரிலீசாக முடியாமல் 125 படங்கள் முடக்கம் - நடிகர் விஷால்
சினிமா செய்திகள்

ரிலீசாக முடியாமல் 125 படங்கள் முடக்கம் - நடிகர் விஷால்

தினத்தந்தி
|
23 Sept 2023 8:22 AM IST

ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிதுவர்மா, அபிநயா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் திரைக்கு வந்து ரூ.100 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதில் விஷால் பங்கேற்று பேசும்போது, "மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளித்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிப்பேன்.

தற்போது படங்கள் எடுத்து ரிலீஸ் செய்வது கஷ்டமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் எடுத்த 125 படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கி உள்ளன. எனவே ரூ.1 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரையிலான செலவில் படம் எடுக்கும் எண்ணத்தில் யாரும் வரவேண்டாம்.

அந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்யுங்கள் அல்லது நிலம் வாங்கி போடுங்கள். பணத்தை தேவையில்லாமல் இழந்து விடாதீர்கள். பெண் இயக்குனர்களும் சாதிக்கிறார்கள். பெண் டைரக்டரோ, ஆண் டைரக்டரோ யார் நல்ல கதையுடன் வந்தாலும் அவர்கள் படங்களில் நடிப்பேன்.

எனது திருமணம் குறித்து கிசுகிசுக்கள் பரப்ப வேண்டாம். எனக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். திருமணம் முடிவானதும் நானே அறிவிப்பேன்' என்றார்.

மேலும் செய்திகள்