< Back
சினிமா செய்திகள்
தோற்றம் மாற 12 அறுவை சிகிச்சை... இளம் ஹாலிவுட் நடிகர் மரணம்
சினிமா செய்திகள்

தோற்றம் மாற 12 அறுவை சிகிச்சை... இளம் ஹாலிவுட் நடிகர் மரணம்

தினத்தந்தி
|
27 April 2023 4:12 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் செயின்ட் ஒன் கொலுசி. இவர் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். செயின்ட் ஒன் கொலுசிக்கு புகழ்பெற்ற கொரியன் பாப் பாடகர் கம் டான்சர் ஜிமின் போன்ற உருவத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவரைப்போல் பாடகராக வேண்டும் என்றும் ஆர்வம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது சாயலுக்கு மாற உடலில் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். தனது உடலில் 12 விதமான அறுவை சிகிச்சைகளை அவர் செய்தார். முகம், மூக்கு, கண் உள்பட பல பகுதிகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த சிகிச்சைகளுக்காக பெரிய தொகையை செலவும் செய்துள்ளார்.

அதிக அறுவை சிகிச்சைகள் காரணமாக அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் தாடை பகுதியில் பொருந்தி இருந்த சில பொருட்களை நீக்குவதற்காக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது செயிண்ட் ஒன் கொலுசிக்கு உடல்முழுவதும் நோய் தொற்று பரவி மரணம் அைடந்தார். அவருக்கு வயது 22.

மேலும் செய்திகள்