100 மில்லியன் பார்வைகளை கடந்த 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல்
|ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' பாடல் பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்தார்.
இப்படம் மட்டுமில்லாமல் இதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' பாடல் பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன்(10 கோடி) பார்வைகளை கடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் அடுத்ததாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியாகி 25 மில்லியன் பார்வைகளை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.