"10 ஆண்டு கால வேண்டுதல்"; திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய நடிகை
|நடிகை முடி இல்லாத தலையுடன், மயிலிறகு ஏந்தியுள்ளவாறான புகைப்படங்களை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
'சார்லி சாப்ளின்', 'பரசுராம்', 'விசில்', 'விகடன்', 'அருவம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர 'யாதுமாகி நின்றாய்' என்ற படத்தை இயக்கி நடித்தார்.
சினிமா தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்த அவர், சமீபத்தில் அரசியலில் இருந்து விலகினார்.
இதற்கிடையில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற அவர், அங்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளார். முடி இல்லாத தலையுடன், மயிலிறகு ஏந்தியுள்ளவாறான புகைப்படங்களை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில், 'இது 10 ஆண்டு கால வேண்டுதல். என் வேண்டுதலை திருப்பதி ஏழுமலையான் நிறைவேற்றி தந்துள்ளார். அதற்காக என் முடியை காணிக்கை செலுத்தி விட்டேன். வேண்டுதலை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. தரிசனமும் நல்லபடியாக நடந்தது'' என்றார். அந்த வேண்டுதல் என்னெவென்று கேட்டபோது, 'சொந்த காரணங்களுக்கான வேண்டுதல். கொஞ்சம் பர்ஷனல்' என்று பதிலளித்தார்.
காயத்ரி ரகுராம் விரைவில் புதிய படத்தை இயக்கவுள்ளாராம். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றும் வருகிறதாம்.