< Back
சினிமா செய்திகள்
10 பெண்கள் பாலியல் புகார்... டைரக்டர் சஜித்கானை பிக்பாசில் சேர்க்க எதிர்ப்பு
சினிமா செய்திகள்

10 பெண்கள் பாலியல் புகார்... டைரக்டர் சஜித்கானை பிக்பாசில் சேர்க்க எதிர்ப்பு

தினத்தந்தி
|
12 Oct 2022 8:47 AM IST

10 பெண்களின் பாலியல் புகாரில் சிக்கிய டைரக்டர் சஜித்கானை பிக்பாசில் சேர்க்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

மீ டூ இயக்கம் மூலம் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். இதில் பிரபல இந்தி டைரக்டர் சஜித்கானும் சிக்கினார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். மீ டூ புகாரில் சிக்கிய சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். தற்போது டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியான சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு எழுதி உள்ள கடிதத்தில், ''டைரக்டர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து உள்ளனர். அவர் மோசமானவர் என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படிப்பட்டவரை சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க செய்து இருப்பது தவறானது. அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''சஜித்கான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காமகொடூரரை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான்கான் எப்படி அறிமுகப்படுத்தலாம்'' என்று விளாசி உள்ளார்.

மேலும் செய்திகள்