< Back
சினிமா செய்திகள்
வெளியானது தேவரா படத்தின் டிரெய்லர்
சினிமா செய்திகள்

வெளியானது 'தேவரா' படத்தின் டிரெய்லர்

தினத்தந்தி
|
10 Sep 2024 11:58 AM GMT

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 'தேவரா' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் தற்போது 'தேவரா' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதுகுறித்த பதிவை இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்