< Back
சினிமா செய்திகள்
கதாநாயகிக்கான கதைகளை விரும்பும் ஆண்ட்ரியா
சினிமா செய்திகள்

கதாநாயகிக்கான கதைகளை விரும்பும் ஆண்ட்ரியா

தினத்தந்தி
|
16 Nov 2022 8:57 AM IST

கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்கள் நிறைய உருவாக வேண்டும் என நடிகை ஆண்ட்ரியா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2, அனல் மேலே பனித்துளி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் 5 படங்கள் கைவசம் உள்ளன. ஆண்ட்ரியா அளித்துள்ள பேட்டியில், ''கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் தற்போது அதிகம் வருகின்றன. இது வரவேற்கத்தக்கது. இந்த நிலைமை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசனுடன் நான் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி படத்திலும் எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்தது. சிறிய நகரத்தில் இருந்து சென்னைக்கு வரும் பெண்ணுக்கு நேரும் துன்பமும் அதில் முடங்காமல் என்ன செய்கிறாள் என்பதும் கதை. இதுபோன்ற கதைகளில் கதாநாயகிகளால் மட்டுமே நடிக்க முடியும். கதாநாயகனால் முடியாது. இதுபோன்று கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்கள் நிறைய உருவாக வேண்டும். திருமணமானால்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இல்லை. திருமணமான பலர் மகிழ்ச்சியாக இல்லை. திருமணம் செய்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனாலும் எனது மகிழ்ச்சிக்கு நானேதான் பொறுப்பு" என்றார்.

மேலும் செய்திகள்