ஆதிபுருஷ் பட வசனகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்...!
|எதிர்ப்புகளை மீறி உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. .
ஐதராபாத்
ராமாயண கதையை மையமாக வைத்து வெளிவந்துள்ள உள்ள ஆதிபுருஷ் படம் வெளியான நாளில் இருந்தே எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. ராமர் தோற்றத்தில் வரும் பிரபாஸ் மீசை வைத்து நடித்து இருந்ததை விமர்சித்தனர். தலையில் கிரீடம் வைத்து ராஜாவைப்போல் சித்தரித்து அவமதித்து இருப்பதாகவும் கண்டித்தனர்.
எதிர்ப்புகளை மீறி உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. .
படத்தின் வசன ஆசிரியர் மனோஜ் முன்டாஷிர் படம் திரையரங்குகளில் வெளியான நாள் முதல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். மோசமான கிராபிக்ஸை விட, பெரும்பாலான பார்வையாளர்கள் அவரது வசனங்களை விரும்பினர். படத்தின் வசனங்களுக்கு பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் பல விளக்கங்களை அளித்த மனோஜ், சமீபத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு உள்ளார். பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கோரினார்.
அவர் "ஆதிபுருஷ் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை ஒப்புக்கொள்கிறேன். கூப்பிய கைகளுடன் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். பிரபு பஜ்ரங் பாலி எங்களை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனத்திற்கும் நமது மகத்தான தேசத்திற்கும் சேவை செய்ய பலம் தரட்டும்" என்று டுவீட் செய்துள்ளார்.