< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
ராமர் கோவில் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு
ராமர் கோவில் ஸ்பெஷல்

ராமர் கோவில் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு

தினத்தந்தி
|
19 Jan 2024 9:49 PM IST

அயோத்தியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமான முறையில், கலை நுட்பத்துடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 நுழைவு வாயிலுக்கு, 44 கதவுகள் மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் பயின்ற சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக விழாவை, உலகமே வியக்கும் வண்ணம் நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடு களை செய்துவருகிறது. அயோத்தியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு திரைப் பிரபலங்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்