< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
ராமர் கோவில் ஸ்பெஷல்
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: குஜராத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட மேளம் அயோத்தி வந்தடைந்தது
|11 Jan 2024 8:39 PM IST
அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் மேளம் ஒப்படைக்கப்பட்டது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட மேளம், அலங்கரிப்பட்ட தேரில் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டது. இரும்பு மற்றும் செப்பு தகடுகளை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்த மேளம், தங்கம் மற்றும் வெள்ளி அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மேளம் அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.