< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
அயோத்தி ராமர் கோவிலுக்காக ஐதராபாத்தைச் சேர்ந்த நபர் தயாரித்த 1,265 கிலோ லட்டு..!
ராமர் கோவில் ஸ்பெஷல்

அயோத்தி ராமர் கோவிலுக்காக ஐதராபாத்தைச் சேர்ந்த நபர் தயாரித்த 1,265 கிலோ லட்டு..!

தினத்தந்தி
|
18 Jan 2024 5:07 AM IST

பூமி பூஜை தொடங்கி கோவிலின் திறப்பு விழா வரை தினமும் 1 கிலோ லட்டு என்ற அடிப்படையில் மொத்தம் 1,265 கிலோ லட்டுவை தயாரித்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் கோவிலுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்ற நபர், அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்குவதற்காக 1,265 கிலோ எடை கொண்ட லட்டுவை தயாரித்துள்ளார். இந்த லட்டு குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இது குறித்து பேசிய நாகபூஷன் ரெட்டி, "நான் கடந்த 24 ஆண்டுகளாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறேன். அயோத்தி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற்றபோது, கோவிலுக்கு காணிக்கையாக ஏதாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அதன்படி பூமி பூஜை தொடங்கிய நாளில் இருந்து கோவிலின் திறப்பு விழா நடைபெறும் நாள் வரை தினமும் 1 கிலோ லட்டு என்ற அடிப்படையில் மொத்தம் 1,265 கிலோ லட்டுவை தயாரித்துள்ளோம். இதன் தயாரிப்பு பணியில் 30 பேர் ஈடுபட்டனர். இந்த லட்டு, சாலை மார்க்கமாக அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்