< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
கும்பாபிஷேகம்: அயோத்தியில் 10 ஆயிரம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
ராமர் கோவில் ஸ்பெஷல்

கும்பாபிஷேகம்: அயோத்தியில் 10 ஆயிரம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு

தினத்தந்தி
|
13 Jan 2024 11:19 AM IST

வருகிற 17-ந் தேதியில் இருந்து அயோத்திக்கு வரும் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட உள்ளன.

அயோத்தி,

அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ந் தேதி நடக்கிறது. அந்த நாளில், அயோத்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், டிரோன்கள் மூலமும் கண்காணிப்பு பணி நடக்கிறது.

வேறு டிரோன்கள் பறந்தால், அவற்றை கட்டுப்படுத்த டிரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ராமர் கோவிலுக்கு செல்லும் சாலைகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. வருகிற 17-ந் தேதியில் இருந்து அயோத்திக்கு வரும் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட உள்ளன. பஸ், ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். இத்தகவல்களை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்