< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்
ராமர் கோவில் ஸ்பெஷல்

அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்

தினத்தந்தி
|
20 Jan 2024 4:50 PM IST

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரைப்பிரபலங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பிரமாண்ட விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அக்சய் குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் நடிகர் அமிதாப் பச்சன் தனி விமானத்தில் அயோத்தி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரைப்பிரபலங்கள் :

  • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தென்னிந்திய நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
  • பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரணாவத், மாதுரி தீக்ஷித் மற்றும் அவரின் கணவர் ஸ்ரீராம் நேநே, பாஜக எம்.பி. ஹேமமாலினி, சன்னி டியோல் போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • பிரபல இயக்குனர்கள் அனுபம் கேர், மதுர் பண்டார்கர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலிக்கும், பின்ணணி பாடகர்கள் ஸ்ரேயா கோஷல், கைலாஷ் கெர், சங்கர் மகாதேவன், அனுப் ஜலோட்டா, சோனு நிகம் மற்றும் அனுராதா பௌட்வால் உள்ளிட்டோருக்கும் இந்த பிரமாண்ட நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1980-களில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர், சீதை வேடங்களில் நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
  • இயக்குனர் சந்திரபிரகாஷ் திவேதி, பாடகி மாலினி அவஸ்தி, சரோத் மாஸ்ட்ரோ அம்ஜத் அலி, இசைஞானி இளையராஜா மற்றும் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் குடும்ப உறுப்பினர்கள், ஜானு பருவா, கௌஷிகி சக்ரவர்த்தி, மஞ்சு போரா மற்றும் மல்சா கோஸ்வாமி, கவிஞர் மனோஜ் முன்டாஷிர் மற்றும் அவரது மனைவி, பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் பிரசூன் ஜோஷி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களில் எத்தனை பேர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்