< Back
ராமர் கோவில் ஸ்பெஷல்
ராமர் கோவில் ஸ்பெஷல்
புதுவையில் பொது இடங்களில் ராமர் கோவில் நிகழ்வை நேரலை செய்ய அனுமதி
|21 Jan 2024 2:39 PM IST
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
புதுவை,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக நிகழ்வை நாடு முழுவதும் பொது இடங்களில் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை புதுச்சேரியில் பொது இடங்களில் நேரலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.