< Back
மாநில செய்திகள்
மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் ஆஸ்பத்திரியில் அனுமதி
மாநில செய்திகள்

மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி
|
1 Oct 2022 6:47 PM IST

மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசன் இன்று காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இதயத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கவர்னர் இல.கணேசன் உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்