என்ஜினீயர்களுக்கு வேலை

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2023-04-09 10:30 GMT

மெக்கானிக்கல் (123), கெமிக்கல் (50), எலெக்ட்ரிக்கல் (57), எலெக்ட்ரானிக்ஸ் (25), இன்ஸ்ட்ரூமென்டேஷன் (25), சிவில் (45) என 325 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 26 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

பி.இ., பி.டெக், பி.எஸ்சி, ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.டெக் போன்ற படிப்புகளில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் 2021, 2022, 2023-ம் ஆண்டுக்கான கேட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கேட் தேர்வு மதிப்பெண், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 11-4-2023 முதல் 28-4-2023 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விரிவான விண்ணப்ப நடைமுறைகளை www.npcil.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்