வார ராசிபலன் 02.06.2024 முதல் 08.06.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

Update: 2024-06-02 00:47 GMT

இந்த வார ராசிபலன்:

மேஷம்

பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம் இது. தொழில், உத்தியோகம் சார்ந்து திடீர் பிரயாணங்கள் உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். ஆயுள் காப்பீடு, ரியல் எஸ்டேட், விவசாய துறையினருக்கு லாபகரமான காலகட்டம். குடும்பத்தினருடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்த கடன்களை முழுவதுமாகவோ, அதன் ஒரு பகுதியையோ திருப்பி செலுத்துவீர்கள். வெளியிடங்களில் அலைந்து திரிவதால் சலிப்பும், மன அழுத்தமும் ஏற்படும். கோபத்தையோ, உணர்ச்சியையோ யாரிடமும் காட்டி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் கேட்டால் தவிர ஆலோசனையோ, உதவியோ அளிப்பது கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதுடன், மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.

ரிஷபம்

உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழும் வாரம். உத்தியோகஸ்தர்கள், தொழில் துறையினருக்கு புதிய தொடர்புகள் கிடைத்து ஆதாயம் ஏற்படும். கலைத்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளை பெற்று மகிழ்வார்கள். பல விஷயங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியே முடித்து விடுவீர்கள். வெளிவட்டார பழக்கம் அதிகமாகும். மனதில் ஏற்படும் உற்சாகத்தால் எல்லோரிடமும் வெளிப்படையாக பேசி விட வேண்டாம். அத்துடன் புதிய நபர்களுடன் சேர்ந்து தொழில் முயற்சிகளில் ஈடுபடும்போது நன்றாக விசாரித்துக்கொள்ள வேண்டும். சுய தொழில் செய்ய வங்கி கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் அதை பெறுவார்கள்.

மிதுனம்

பல கவலைகள் மனதில் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் நிலவும் வாரம் இது. உத்தியோகம், தொழில் துறையினர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெண் நண்பர்கள் பொருளாதார உதவி செய்வார்கள். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். தொழில், உத்தியோகம் தொடர்பாக வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறும். சிறிய விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு இருமுறை யோசித்த பின்னரே செயல்பட வேண்டும். வெளியிடங்களுக்கு செல்பவர்கள் உணவு, தண்ணீர் ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கடகம்

முயற்சிகள் வெற்றி அளிக்கும் வாரம் இது. மனதில் உற்சாகம் பெருகும். தொழில், உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு புதிய நம்பிக்கை உருவாகும். இருந்தாலும் மனதில் ஏற்படும் ஒருவித நம்பிக்கையற்ற நிலையால் அவ்வப்போது குழப்பம் ஏற்படும். நண்பர்களுடன் பயணம், விருந்து என்று பொழுது போகும். விவசாயம், ரியல் எஸ்டேட் துறையினர் நல்ல லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும். அரசு நிர்வாக பணியாளர்கள், சீருடை பணியாளர்கள் விரும்பிய உத்தியோக உயர்வு கிடைக்கப்பெறுவார்கள். பலருக்கு நீண்ட காலமாக மனதில் இருந்த விருப்பம் ஒன்று நிறைவேறும். அன்னையின் உடல் நலன் காக்கும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

சிம்மம்

மனதில் இருந்த சங்கடங்கள் அகலும் வாரம் இது. உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் புதிய பொறுப்புகளை ஏற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க தனிப்பட்ட  அவமானங்களை பொருட்படுத்தாமல் உறவினர்களிடம் கடன் பெறும் சூழல் ஏற்படும். நல்லதுக்கு காலமில்லை என்ற எண்ணம் மனதில் உருவாகும். விருப்பம் இல்லாவிட்டாலும் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியதாக இருக்கும். அரசு பணியாளர்கள் சில நன்மைகளை அடைவார்கள். அரசு ஒப்பந்ததாரர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து பணிகளை தொடங்குவார்கள். எதிர்பாராத சூழ்நிலைகளை துணிச்சலாக எதிர்கொண்டு நம்பிக்கையோடு தடைகளை கடந்து செல்லும் காலகட்டம் இது.

கன்னி

அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து காரிய வெற்றி பெற வேண்டிய வாரம். எந்தவொரு பயணமும் அவசியமாக இருந்தாலன்றி தவிர்ப்பதே நல்லது. அதனால் வீண் விரயங்கள் தவிர்க்கப்படும். உறவினர்கள் அளிக்கும் தொல்லைகளால் மனதில் சங்கடம் ஏற்படும். இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சகஜமாக இருப்பீர்கள். பலவித மனக் குழப்பங்களால் தூக்கம் இல்லாமல் தவிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்களை முழுமையாக நம்பி செயல்பட வேண்டாம். இந்த வாரம் சொந்த தொழில் செய்பவர்கள் கூடுதல் முதலீடுகளை செய்யாமல் தவிர்க்க வேண்டும். புதிய கடன்களை இப்போது வாங்க வேண்டாம். தொலைபேசி மூலம் கிடைக்கும் செய்திகளால் மனதில் உற்சாகம் ஏற்படும்.

துலாம்

உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய வாரம் இது. தொலைதூர பயணங்களை தவிர்க்க வேண்டிய காலகட்டமும் கூட. மற்றவர்களின் பணம் உங்கள் கையில் புரளும். சிலருக்கு மறைமுகமாக தன லாபம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம், தொழில் துறையினர் அரசு தரப்பு தடை தாமதங்களை சந்திப்பார்கள். எதிர்பாராத சூழலில் எப்போதோ செய்த தவறு இப்போது நினைவுக்கு வந்து மன அமைதியை குலைக்கும். மனதை அமைதிப்படுத்த இனிமையான திரைப்பட பாடல்களை இரவில் கேட்டு மகிழ்வீர்கள். மற்றவர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பாளியாக நிற்கும் சூழல் உருவாகும். இறை நம்பிக்கையால் சிக்கல்களை கடக்கும் மனதிடம் உங்களுக்கு ஏற்படும்.

விருச்சிகம்

அனைத்து தரப்பினருக்கும் உற்சாகம் அளிக்கும் வாரம் இது. அரசியல்வாதிகள் மக்கள் அங்கீகாரத்தை பெற்று பதவியில் அமர்வார்கள். வியாபாரிகள், தொழில்துறை, உத்தியோகத்தில் உள்ளவர்கள் மாற்றங்களால் முன்னேற்றத்தை சந்திப்பார்கள். குடும்ப உறவுகள் ஏற்படுத்தும் தொல்லைகளையும் எதிர்கொள்ள வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை சந்திக்க வீடு தேடி வருவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல ஆதாயத்தை அளிக்கும் வாரம். விவசாயம், ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். மற்றவர்களிடம் தொலைபேசியில் பேசும்போது அருகில் இருப்பவர்களை கவனித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மறைமுக எதிரிகளால் பல தொல்லைகள் ஏற்படும். வார இறுதியில் பயணங்களை தவிர்த்து அமைதியாக ஓய்வெடுப்பதே உடல் நலனுக்கு உகந்தது.

தனுசு

சிக்கலான சூழ்நிலையை பொறுமையாக கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. இரவு நேர பயணங்களை இந்த வாரம் கண்டிப்பாக தவிர்த்து விடுவது அவசியம். தொழில், பணி சம்பந்தமாக மற்றவர்களை பகலில் மட்டுமே சந்திப்பது நல்லது. உத்தியோகம், தொழில்துறையினருக்கு வார இறுதியில் நல்ல செய்திகள் வந்து சேரும். செலவோடு செலவாக கடன் வாங்கி சொந்தபந்தங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யும் சூழல் ஏற்படும். உணவு, உறக்கம் ஆகிய விஷயங்களில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலர் மருத்துவமனையில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டி வரும். செலவுக்கேற்ற வரவுகள் இல்லாததால் கடன் வாங்கி சமாளிப்பீர்கள்.

மகரம்

மனதில் உற்சாகம் உருவாகும் வாரம் இது. நீண்ட நாளாக மனதில் இருந்த திட்டங்களை நிறைவேற்றும் சூழல் உருவாகும். அரசியல் துறையினர் மக்களது அங்கீகாரத்தை பெற்று விரும்பிய பொறுப்புகளில் அமர்வார்கள். உத்தியோகம், தொழில்துறையினருக்கு இது லாபகரமான வாரம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். தொழில்துறையினருக்கு லாபகரமான வாரம். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொலைபேசி வழியில் பல நல்ல செய்திகள் வந்து சேரும். பலருக்கு புதிய பெண் நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். ஜோதிடம், ஆன்மீகம், நீதித்துறை, விவசாயம், தங்கநகை வியாபாரம் ஆகிய துறையினருக்கு பொருளாதார உயர்வு உண்டு. மாணவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

கும்பம்

உத்தியோகம், தொழில்துறையினர் கூடுதலாக உழைத்து தங்கள் பெயரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. பண நெருக்கடிகளால் மன உளைச்சல் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையால் நிவாரணம் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும் வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொந்த தொழிலில் ஈடுபடலாமா என்றும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு உத்தியோகத்துக்கு மாறலாமா என்ற எண்ணமும் ஏற்படும் காலகட்டம் இது. பிறரது சங்கடங்களுக்கு ஆறுதல் சொல்லுவதுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் கையில் உள்ள காசையும் இழக்கும் சூழல் ஏற்படும்.

மீனம்

பிரயாணங்களால் மனதில் நிம்மதியும், உற்சாகமும் ஏற்படும். மனதுக்குள் புதிய சிந்தனைகள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது கவனமாக அளவாக பேசுங்கள். இல்லாவிட்டால் உங்கள் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும். புதிய இறை வழிபாடுகளை மேற்கொண்டு சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பீர்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் வாரம். அலைச்சல்களுக்கு பின்னரே கேட்ட இடத்திலிருந்து பொருளாதார உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்மறை எண்ணங்களால் மனதில் ஒருவித பயம் ஏற்படும். எந்தவொரு விஷயத்திலும் பலமுறை சிந்தித்த பின்னரே இறங்க வேண்டும். பணி புரியும் பெண்கள் அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்