ஜனாதிபதி தோ்தல்: பாஜக வேட்பாளா் திரவுபதி முர்முவுக்கு நிதீஷ்குமாா் ஆதரவு

ஜனாதிபதி தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு பீகாா் முதல்-மந்திாி ஆதரவு தொிவித்து உள்ளாா்.

Update: 2022-06-22 11:32 GMT

Image Courtesy: PTI 

பாட்னா,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திாி யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்து உள்ளனா்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளா் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பீகாா் முதல்-மந்திாி நிதீஷ்குமாா் தொிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில்,

திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பழங்குடியின பெண். நாட்டின் உயரிய பதவிக்கு பழங்குடியின பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

திரவுபதி முர்மு ஒடிசா அரசாங்கத்தில் மந்திாியாக இருந்துள்ளாா். ஜார்கண்ட் மாநில கவா்னராகவும் பதவி வகித்து உள்ளாா். நேற்று, திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என்று பிரதமர் தெரிவித்தார். இதற்காக பிரதமருக்கு மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவா் பதிவிட்டு உள்ளாா்.

Tags:    

மேலும் செய்திகள்