இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளது - மத்திய சுகாதாரதுறை மந்திரி

இந்தியா முழுவதும் 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளதாக மத்திய சுகாதாரதுறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-16 10:40 GMT

புதுடெல்லி,

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 56 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனவை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக அனைவருக்கும் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இந்திய குடிமக்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது. இந்நிலையில் நாட்டில் இதுவரை 199 கோடியே 87 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்று 22 லட்சத்து 93 ஆயிரம் டோஸ்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளதாக மத்திய சுகாதாரதுறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்