கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக ஏ.ஐ.ஓ. ஏ 5402 என்ற பெயரில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது 23.8 அங்குல ஹெச்.டி. தொடு திரையைக் கொண்டுள்ளது. மிகவும் மெல்லியதாகவும் பார்ப்பதற்கு அழகான தோற்றமுடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இனிய இசையை வெளிப்படுத்த உயர் தரத்திலான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இன்டெல் 13-வது தலைமுறை ஐ5 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 16 ஜி.பி. ரேம், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.94,900.