விதிமுறைக்கு புறம்பான பந்துவீச்சு: 2 வீரர்களுக்கு பந்து வீச தடை - பி.சி.சி.ஐ. அதிரடி

பி.சி.சி.ஐ. மேலும் 3 வீரர்களை சந்தேகத்திற்குரிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

Update: 2024-11-23 05:20 GMT

image courtesy: PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), விதிமுறைக்கு புறம்பான முறையில் பந்து வீசிய புகாரில் 2 வீரர்களுக்கு பவுலிங் செய்ய தடை விதித்துள்ளது. மேலும் 3 வீரர்களை சந்தேகத்திற்குரிய பந்து வீச்சாளர் பட்டியலில் சேர்த்து அதிரடியான முடிவை எடுத்துள்ளது.

அதன்படி தடை செய்யப்பட்ட பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மனீஷ் பாண்டே (கர்நாடகா) மற்றும் ஸ்ரீஜித் கிருஷ்ணன் (கர்நாடகா) இருவரையும் சேர்த்துள்ளது. இருவரும் தடை நீங்கும் வரையில் இனி வரும் போட்டிகளில் பந்து வீச முடியாது. இதில் மனிஷ் பாண்டே இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் போட்டிகளில் விளையாடியபோது இவர்கள் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய பந்து வீச்சாளர் பட்டியலில் இந்திய ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா (ராஜஸ்தான்), சவுரப் துபே (விதர்பா) மற்றும் கேசி கரியப்பா (மிசோரம்) ஆகியோரை சேர்த்துள்ளது.

ஐ.பி.எல். ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில் பி.சி.சி.ஐ.-ன் இந்த முடிவு அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்