பிரசாரத்தின்போது திடீரென குழம்பிப்போன உதயநிதி ஸ்டாலின் - கூட்டத்தில் இருந்து வந்த கோஷம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

Update: 2024-04-05 12:22 GMT

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து காட்டூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, பெண் ஒருவர் செல்பி எடுக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், அந்த பெண்ணின் செல்போனை வாங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுடன் செல்பி எடுத்தார்.

தொடர்ந்து பிரசாரத்தில் பேசிய அவர் தீப்பெட்டி சின்னம் என்று கூறுவதற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறினார். அப்போது மக்கள் தீப்பெட்டி சின்னம் என கோஷமிட்ட நிலையில் சுதாரித்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் உடனே மக்களிடம் மன்னிப்பு கோரினார். இதனால் அந்த இடத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்