நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.- தி.மு.க. 18 தொகுதிகளில் நேரடி போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- தி.மு.க. 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

Update: 2024-03-21 07:06 GMT

சென்னை,

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- தி.மு.க. நேரடியாக மோதும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 18 தொகுதிகளில் 2 கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. சில தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. அ.தி.மு.க. தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் தி.மு.க.வோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியிடுகிறது.

தொகுதிகள் விவரம்:-

* வடசென்னை

* தென்சென்னை

* ஸ்ரீபெரும்புதூர்

* காஞ்சிபுரம்

* அரக்கோணம்

* வேலூர்

* தர்மபுரி

* திருவண்ணாமலை

* ஆரணி

* கள்ளக்குறிச்சி

* சேலம்

* ஈரோடு

* நீலகிரி

* கோவை

* பொள்ளாச்சி

* பெரம்பலூர்

* தேனி

* தூத்துக்குடி

Tags:    

மேலும் செய்திகள்