கவுரவத்தை காப்பாற்ற 50 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சி - பிரதமர் மோடி கடும் தாக்கு

கவுரவத்தை காப்பாற்ற 50 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-17 12:04 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "கவுரவத்தை காப்பாற்ற 50 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. கடந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதியில் மீண்டும் போட்டியிட மாட்டார் என்று நான் சொன்னேன். நான் சொன்னது சரிதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் (மக்கள்) அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து உங்கள் பகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்." என்றார்.

பதேபூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி களம் காண்கிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் நரேஷ் உத்தம் படேல் போட்டியிடுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்