தேர்தல் பரப்புரைக்காக 16ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராஜ்நாத் சிங்

பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய ராஜ்நாத் சிங் வரும் 16ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

Update: 2024-04-13 14:19 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதுதமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ராஜ்நாத் சிங் வரும் 16ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்