தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- ப.சிதம்பரம் பேட்டி

ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2024-04-06 12:10 GMT

காரைக்குடி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் தங்கள் கொள்கைகளுக்கு முரணான பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது.

மாநிலத்திலும் மத்தியிலும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைவது மிகவும் அபூர்வம். தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. எனவே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்