எல்லா மக்களவைத் தேர்தலும் முக்கியம்தான் - நடிகர் ஜெயம் ரவி பேட்டி

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-19 12:23 GMT

சென்னை,

அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஜெயம் ரவி வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

அனைவரும் வாக்களிக்க வேண்டும். எல்லா மக்களவைத் தேர்தலும் முக்கியம்தான் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்