பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
நடிகை ரூபாலி கங்குலி பா.ஜ.க.வில் இணைந்தார்.
டெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் பிரபலங்கள் மாற்று கட்சிகளில் இணையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதேபோல், சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சிகளில் இணையும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ரூபா கங்குலி. இவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்' என்றார்.