அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Update: 2024-11-29 11:16 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று பெஞ்சல் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3  மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதன்படி , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி , திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்