புயல் பாதிப்பு: சென்னை கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை கொளத்தூர் தொகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2024-12-01 06:28 GMT

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த சூழலில் பெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே பெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பெஞ்சல் புயலினால் நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சாய்ந்திருந்த மரங்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொளத்தூர் செல்வி நகரில் பொதுமக்களை சந்தித்த அவர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்