சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

Update: 2024-11-30 10:22 GMT

சென்னை,

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது . மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நடவடிக்கைகளை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அமைச்சர் சேகர் பாபு,மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்