தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சொத்து வரி உயர்த்தப்படவில்லையென எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2024-11-29 12:35 GMT

சேலம்,

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"திருப்பூரில் இன்று 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டம், ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. திமுக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சொத்து வரியை உயர்த்திவிட்டு எங்கள் மீது பழியை போடுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் சொத்து வரி ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்