கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை,
முத்தையா என்ற இயற்பெயரை கொண்ட கவிஞர் கண்ணதாசன் 1927-ம் ஜூன் 24 ஆம் தேதி காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருப்பது கண்ணதாசன் பாடல்கள் ஆகும்.
இந்த நிலையில், கவிஞர் கண்ணதாசனின் 97-வது பிறந்தாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை தியாகராய நகர் கோபதி நாராயண சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கண்ணதாசன் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.