நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு..!

நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-08-30 14:16 GMT

சென்னை,

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள் , மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊக்கத்தொகைக்கான 1000 பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 02.08.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 17.08.2023ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு 10.09.2023 அன்று நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று (30.08.2023) வெளியிடப்பட்டுள்ளது.

நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்