தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
புதுச்சேரியில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுச்சேரி
முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு திருமகள் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராதாகிருஷ்ணன் (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ராதாகிருஷ்ணனின் இடது காலில் அடிபட்டு கால் துண்டானது. பின்னர் செயற்கை கால் பொருத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வேதனையால் ராதாகிருஷ்ணன் மது குடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை நிறுத்தினால்தான் பெண் பார்க்க முடியும் என்று கூறினர். இதனால் மனவேதனையுடன் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.