மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

புதுச்சேரி பெரியகடை போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-19 16:32 GMT

புதுச்சேரி

புதுச்சேரி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் இன்று இரவு ரெயின்போ நகர் வள்ளலார் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்