வெல்டிங் தொழிலாளி தற்கொலை
புதுவையை அடுத்த முள்ளோடையில் தீராத வயிற்று வலியால் வெல்டிங் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
பாகூர்
முள்ளோடை அடுத்த பள்ள கொரவள்ளிமேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). வெல்டிங் தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று செல்வத்துக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.