திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. விழாவில் வருகிற 31-ந் தேதி திருக்கல்யாணம், ஜூன் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் தீமிதி உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.