ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
வில்லியனூர் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி
புதுவை மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரடெ்டி உத்தரவின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் வில்லியனூர் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். வில்லியனூர் மார்க்கெட், உத்திரவாகிணிபேட், கணுவாப்பேட்டை, கரையாம்பட்டு, தில்லை நகர், கூடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று. அப்பகுதிகளில் உள்ள ரவுடிகள் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அதேபோல் பொதுமக்களிடமும், யாரும் தொல்லை கொடுத்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தினர்.