ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
புதுவையில் பணிநிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள கல்வித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன், பொதுச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மத்திய கூட்டமைப்பு செயலாளர் லட்சுமணசாமி முன்னிலை வகித்தார்.
காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 2 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களை பணி மாற்றம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பாலசேவிகா சங்க தலைவர்கள் வித்யா, தமிழ்மலர், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.