இடி மின்னலுடன் திடீர் மழை

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரியில் நேற்று இரவு மழை பெய்தது.

Update: 2022-11-10 17:39 GMT

புதுச்சேரி

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரியில் இன்று  இரவு மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (வெள்ளிக்கிழமை) வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) வடமேற்கு திசையில் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 4 நாட்களுக்கு பரவலாக மிதமான முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மழை

இந்தநிலையில் புதுச்சேரியில் இன்று காலை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

மழையால் சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது. நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்