நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
புதுவை காலாப்பட்டு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
புதுச்சேரி
புதுவை காலாப்பட்டு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, நவோதயா வித்யாலயா பள்ளி, பெரியகாலாப்பட்டு (ஒரு பகுதி), புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, கனகசெட்டிகுளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.