மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-10-14 16:58 GMT

வில்லியனூர்

வில்லியனூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கமலரசன் (வயது 47). புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

வேலைக்கு சென்ற நேரம் போக, வீட்டில் இருக்கும்போது தெரிந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்த்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் தர்மாபுரியை சேர்ந்த நண்பர் செந்தில், தனது மோட்டார் சைக்கிளை பழுது நீக்குமாறு கமலரசனின் வீட்டு முன்பு கொடுத்து விட்டு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டை சுற்றி புகை மூட்டமாக இருந்ததால் வெளியே வந்து பார்த்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவைத்த மர்ம நபர்கள் யார்? என்றும், முன்விரோதம் காரணமாக தீ வைக்கப்பட்டதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்