வக்கீல் சேம நல முத்திரை வெளியீடு
புதுச்சேரியில் வக்கீல் சேமநல முத்திரை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி
புதுவை கோர்ட்டில் வக்கீல் சங்க அலுவலகத்தில் பாண்டிச்சேரி வக்கீல் சேம நல முத்திரை வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு வக்கீல் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கதிர்வேல் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சேம நல முத்திரையை வெளியிட்டார். இதனை மூத்த வக்கீலும், முன்னாள் துணை சபாநாயகருமான பக்தவச்சலம், முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர் ரங்கநாதன், சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வக்கீல் சங்க பொருளாளர் லட்சுமி நாராயணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்கிலும் ரூ.20 மதிப்புள்ள பாண்டிச்சேரி வக்கீல் நல முத்திரையும், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளுக்கு ரூ.25 மதிப்புள்ள முத்திரையை ஒட்டி தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.