தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர்

Update: 2023-06-02 16:36 GMT

புதுச்சேரி

புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 52). பெயிண்டர். இவருக்கு பூரணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று  நாராயணமூர்த்தி மது குடித்து விட் வீட்டுக்கு வந்தததாக கூறப்படுகிறது. இதை பூரணி கண்டித்துள்ளாா். இதனால் மனவேதனை அடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்