கட்டிட தொழிலாளி தற்கொலை

மூலக்குளம் அருகே கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-23 16:31 GMT

மூலக்குளம்

மூலக்குளம் மேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆக வில்லை. தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக கார்த்திகேயன் கட்டிட வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்