போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

புதுச்சோியில் வீடு காலி செய்வதில் தகராறில் போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-08 18:12 GMT

புதுச்சேரி

புதுவை வாணரப்பேட்டை எல்லை கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 36). போலீஸ்காரர். இவரது வீட்டின் மேல் தளத்தில் ரமேஷ் (46) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டை காலி செய்வதில் குணசேகரன், ரமேஷ் ஆகியோருக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷின் மருமகள்கள் ஆகியோர் குணசேகரனின் மனைவி சங்கீதா, அவரது தங்கை பாரதியை தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த குணசேகரன் வீட்டிற்கு விரைந்து வந்து தட்டிக்கேட்டார். அப்போது ரமேஷ், அவரது மகன்கள் மதன் (27), கிஷோர் (25) ஆகியோர் இணைந்து குணசேகரனை செங்கலால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த குணசேகரன், பாரதி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் குணசேகரன் அளித்த புகாரின் பேரில் ரமேஷ், மதன், கிஷோர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்